Loading...
 

கிளப் உருவாக்கம் - சாசனம்

 

முதல் சந்திப்பை நடத்துவது.
 

Agora Ambassador Lamichhane Shyam (8th from the right) and the members of the first club in Nepal - Kathmandu Speakers Club
Agora தூதர் லமிச்சேன் ஷியாம் (வலமிருந்து 8 வது) மற்றும் நேபாளத்தின் முதல் கிளப்பின் உறுப்பினர்கள் - Kathmandu Speakers Club

சந்திப்பை முன்னெடுத்து நடத்துங்கள். போதுமான அளவு நிகழ்ச்சி நிரல்களை பிரிண்ட் செய்வதை உறுதிசெய்துக் கொள்ளுங்கள், குறிப்பாக ஒவ்வொரு நிகழ்ச்சி நிரலிலும் பின்வருவனவற்றை சேர்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:

  • உங்கள் கிளப் குறித்த தகவல் மற்றும் கிளப்பை தொடர்பு கொள்வதற்கான தகவல்.
  • அடுத்த சந்திப்பின் தேதி, நேரம் மற்றும் வளாகம்.

நீங்கள் வரலாற்றில் பதியக்கூடிய விஷயங்களை செய்வதால், :-) புகைப்படங்கள் எடுப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மேலும் படங்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள், இதன்மூலம் அவற்றை நாங்கள் வெளியிடலாம் (அந்தப் படங்களில் உள்ளவர்களிடத்தில் அப்படத்தை வெளியிடுவதற்கான சம்மதத்தை பெற்றிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்).

சந்திப்பின் நிறைவில், அடுத்த சந்திப்பின் தேதியை மக்களுக்கு நினைவுபடுத்தி, அங்குள்ளவர்களிடம் கேட்டு, அடுத்த சந்திப்பில் அவர்கள் வகிக்கும் பாத்திரம் குறித்து முடிவெடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

கிளப் அதிகாரிகள்

முதல் சந்திப்பிற்குப் பிறகு, கிளப் அதிகாரிகள் அல்லது கிளப் நிர்வாக குழு பற்றி முடிவு செய்ய வேண்டிய நேரம் இது. இந்த வழிகாட்டியில் அதிகாரி பாத்திரங்கள் குறித்து பின்னர் விவரிக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக, கிளப்பை ஆரம்பிக்கும் நபர்தான் அந்தக் கிளப்பின் தலைவராகவும் செயல்படுவார். சிலர் ஆண்டு முழுவதும் தலைவராக இருப்பார்கள், சிலர் கிளப்பை ஆரம்பித்துவிட்டு, அது ஆரோக்கியமாக செயல்படுவதை உறுதிசெய்ததும், தலைவர் பதவியிலிருந்து விலகி, மற்ற விஷயங்களைச் செய்யவும் விரும்புகிறார்கள். இது எல்லாம் உங்களிடம் உள்ள நேரத்தைப் பொறுத்தது.

மீதமுள்ள அதிகாரிகளைப் பொறுத்தவரை, ஆரம்பக்கட்டத்தில் நீங்கள் எல்லா பாத்திரங்களையும் வகிப்பீர்கள், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு நீங்கள் அவ்வாறு செய்வீர்கள். ஆனால் எந்தப் பிரச்சினையும் வராமலிருக்க நீங்கள் சௌகரியமாக உணரும் நபர்களுடன் ஒரு குழுவமைத்து, அவரவர்களுக்கென்று பணியை ஒதுக்கிவிடுவது சிறந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

கிளப்பின் நிறுவனரான, நீங்கள் நியமிக்கும் முதல் அதிகாரிகள் அநேகமாக தன்னார்வலராக இருப்பார்கள். கிளப் "நிலையானதும்" (ஒவ்வொரு சந்திப்பிற்கும் வரும் அதே நபர்களுடன் தவறாமல் சந்திப்பை மேற்கொள்வது), கிளப்பின் ஒரு சிறப்பு சந்திப்பின் போது அடுத்த குழுவை உருவாக்குவது குறித்து நீங்கள் கலந்தாலோசிக்கலாம்.

இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே பாத்திரத்தை வகிக்க விரும்பினால், வாக்குமுறைத் தேர்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.


Contributors to this page: shahul.hamid.nachiyar and agora .
Page last modified on Sunday May 30, 2021 22:05:30 CEST by shahul.hamid.nachiyar.